விலை வாசி உயர்வு தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது: மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா
உத்தரபிரதேசம் மாநிலம் பாராபங்கியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா பணவீக்கம் உயர்வு நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு தனக்கு மகிழ்ச்சி அளிப்பாதாகவும், விலைவாசி உயர்வால் விவசாயிகள் அதிக லாபம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகையில் அமைச்சர் இப்படி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பெனி பிரசாத் வர்மாவின் இத்தகைய கருத்துக்கு பாரதீய ஜனதா மற்றும் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.