ஹாலிவுட் இயக்குநர் டோனி ஸ்காட் தற்கொலை
ஹாலிவுட்டில் மிகச் சிறந்த படங்களை இயக்கியுள்ள டோனி ஸ்காட், லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள கௌண்டி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
68 வயதான டோனி ஸ்காட் டாப் கன், டேஸ் ஆப் தண்டர் மற்றும் பெவர்லி ஹில்ஸ் காப் 2 என்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். டோனி ஸ்காட் தற்கொலைக்கான காரணத்தை டோனி ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார் எனவும் அதை அவரது காரில் இருந்து எடுக்கப்பட்டதாக அமெரிக்க காவல் துறை அதிகாரி ஜெனிபர் அஸ்பார்ன் தெரிவித்துள்ளார்.