கரூரில் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர்- திருச்சி பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் ரயில் நிலையம் முன்பு மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால்- எர்ணாகுளம் ரயில், மயிலாடுதுறை- மைசூர் ரயில், பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயிலில் முன்பு இருந்தது போல 8 முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டு இயக்க வேண்டும். சேலம் - கரூர் அகல ரயில் பாதைப் பணியை விரைவில் முடித்து இந்தாண்டே செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சித்தலவாய் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் ரயில் நிலையத்தின் 2 முதல் 5 வது நடைமேடை வரை செல்லும் பகுதிகளுக்கு மேற்கூரை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் எஸ். அண்ணாதுரை தலைமை வகித்தார்.