வடகிழக்கு மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
அசாமில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தென்மாநிலங்களில் தாக்கப்படுகின்றனர் என்று பரவிய வதந்தியின் காரணமாக, தங்கள் உறவினர்களின் அழைப்பின் பேரில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த உழைப்பாளி மக்கள் தென் மாநிலங்களிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, நெல்லை, துட்த்துக்குடி, குமரி உள்பட பல மாவட்டங்களில் கட்டுமானம் மட்டும் கடுமையான உடல் உழைப்புப் பணியில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக கொத்தடிமை போல் பணிசெய்யும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வதந்தியின் எதிரொலியால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலை உள்ளது.
வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக, தொழிலுக்காக வரக்கூடியவர்களை அரவணைக்கும் பண்பாடு கொண்டவர்கள் தமிழக மக்கள். எனவே, தமிழகம் வந்துள்ள வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் எவரும் அச்சப்படத்தேவையில்லை என மார்க்சிளிட் கம்யூனிளிட் கட்சி கேட்டுக்கொள்கிறது.குறுஞ்செய்தி மற்றும் இணையத்தின் வாயிலாக வதந்தியை பரப்பியவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், வடகிழக்கு மாநில மக்கள் தமிழகத்தில் அச்சமின்றி வாழ, பணிபுரிய, தொழில் செய்ய உகந்த சூழலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.