லட்சுமணனின் இடத்தை நிரப்ப முடியாது: டோனி
இந்திய அணியில் லட்சுமணனின் இடத்தை நிரப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான வி.வி.எஸ்.லட்சுமண் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். அவரது இந்த திடீர் முடிவு கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியது.
ஓய்வு முடிவை அறிவித்த லட்சுமன் இதுகுறித்து கேப்டன் டோனியிடம் தகவல் தெரிவிக்க அவரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் இயலவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கேப்டன் டோனி லட்சுமன் ஓய்வு பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டிவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அணியில் லட்சுமணனின் இடத்தை நிரப்ப முடியாது என்று கூறியுள்ளார். இந்திய வீரர்கள் அவரின் பிரிவை உணர்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையில் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் லட்சுமணும் ஒருவர் என்று டோனி கூறியுள்ளார்.