கூடங்குளம் மின்சாரம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
கூடங்குளம் மின்சாரம் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் யூனிட்டில் இருந்து தயாரிக்கப்படும் 1000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்குத் தர வேண்டும் என்று நான் முன்னர் எழுதிய 2012 மார்ச் 31 மற்றும் 2012 ஏப்ரல் 25ம் தேதியிட்ட இரு கடிதங்கள் குறித்து நினைவூட்ட விரும்புகிறேன்.
ஆனால், இதுவரை தங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் யூனிட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் விரைவில் துவங்கவிருக்கிறது என்பதை அறிந்தேன். இந்த நிலையில், முன்னர் நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவற்றுக்கு தகுந்த பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.