அண்மைச் செய்திகள்
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் ||
இந்தியா
17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி
......................................
டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான்
......................................
சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை
......................................
மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
......................................
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (8:46 IST)



சீன மாணவி உலக அழகியாக தேர்வு!
இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம்!



உலக அழகி பட்டம் வென்ற சீன மாணவி வென் ஜியாவை (நடுவில் இருப்பவர்) படத்தில் காணலாம். 2வது மற்றும் 3வது இடம் பிடித்த வேல்ஸ்சின் ஷோபி (இடது), ஆஸ்திரேலியாவின் ஜெஸிகா (வலது) ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார். கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார்.

சீனாவை சேர்ந்தவர் உலக அழகியாக தேர்வு பெறுவது இது இரண்டாவது முறையாகும். பட்டம் வென்றபின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தஇசை மாணவியான வென்ஜியா, வருங்காலத்தில் இசை ஆசிரியையாக பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.


வேல்ஸ்சின் ஷோபி மோல்ட்ஸ் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெஸிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்தது. கடந்த 2000-வது ஆண்டில் இந்திய அழகி பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றார். அதன்பின் இதுவரை இந்திய அழகிகள் யாரும் இந்த பட்டம் வெல்லவில்லை.

இந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற இந்திய அழகி வான்யா மிஸ்ரா உலக அழகி பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியில் அவருக்கு 7-வது இடம்தான் கிடைத்தது. என்றாலும் வான்யா மிஸ்ராவுக்கு, ஷமிஸ் சோசியல் மீடியா', ஷபிøட்டி வித் எ பர்பஸ்' ஆகிய இரு பட்டங்கள் வழங்கப்பட்டன.



இந்திய அழகி வான்யா மிஸ்ரா



அரை இறுதிப்போட்டியின்போது 1981-ம் ஆண்டு வெளியான "உம்ரோ ஜான்'' என்ற இந்திப்படத்தில் இடம் பெற்றிருந்த ஷதில் சீஸ் கியா ஹை' என்ற பாடலுக்கு வான்யா ஆடிய நடனம் மூலம், சிறந்த 7 அழகிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.


இறுதிப்போட்டியில் பங்கேற்ற அழகிகளிடம் "உலக அழகி பட்டத்துக்கு தாங்கள் எந்த விதத்தில் தகுதியானவர்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "கனிவான இதயமும் அடக்கமும் நிறைந்த ஒருவர் அடுத்த உலக அழகியாக இருக்கவேண்டும். அவர் எங்கு சென்றாலும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களில் ஒருவராக அவரை கருத வேண்டும்'' என்று இந்திய அழகி வான்யா பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Ravi-Swiss Date :8/20/2012 12:51:34 PM
நண்பர் குழந்தை கூறுவதும் உண்மை' இப்போ சீனா இந்தியா அனைத்திலும் முன்னேறுகின்றபடியால் (வல்லரசாக) அழகிப் போட்டி தலைமைகள்' நடுக்கத்தில் இவர்களுக்குக் கொடுத்து இருக்கலாம்''? இவர்களை விட பல அழகிகள் உலகத்தில் உண்டு''?
Name : nkulandhaisamy Country : United States Date :8/19/2012 6:34:46 PM
உலக அழகி போட்டிகள் அழகு சாதன பொருட்களின் எதிகால விற்பனையை விருவு படுத்தும் நோக்கமாகவே நடத்தபடுகின்றன.அந்த வகையில் சீனா ஒரு பெரும் மார்கெட் தானே! இந்தியாவும் ஒரு பெரிய மார்கெட் என்பதால்தான் சிறப்பு பட்டம் கொடுத்துள்ளார்கள்.
Name : nkulandhaisamy Country : United States Date :8/19/2012 6:33:05 PM
உலக அழகி போட்டிகள் அழகு சாதன பொருட்களின் எதிகால விற்பனையை விருவு படுத்தும் நோக்கமாகவே நடத்தபடுகின்றன.அந்த வகையில் சீனா ஒரு பெரும் மார்கெட் தானே!