வெள்ளிப்பதக்கம் வென்றார் சுஷில் குமார் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான இன்று, ஆண்கள் மல்யுத்தம் 66 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்று மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் 2012ல் இந்தியா- 2-வெள்ளி, 4-வெண்கலம் மொத்தம் 6 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது