டெசோ வழக்கு விசாரணைசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ மாநாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து நேற்று ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது.
டெசோ மாநாட்டு தலைவர் சார்பில் தி.மு.க. மூத்த வக்கீல் வில்சன் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பாலிடம் அவசர முறையீடு செய்தார். தலைமை நீதிபதி வெளியூர் சென்றிருந்ததால், நீதிபதி பால் வசந்தகுமார் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாநா ட்டிற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை இரண்டு நீதி பதிகள் கொண் ட பெஞ்ச் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நான் தனியாக விசாரிப்பது உகந்த தல்ல. எனவே, தலைமை நீதிபதியிடம் இந்த மனுவை அனுப்புகிறேன் என்று கூறினார்.
தலைமை நீதிபதி வெளியூரில் இருப்பதால், இவ்வழ க்கை நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் கொண்ட பெஞ்ச் வழக்கை விசாரித்து வருகின்றனர்.