அத்வானி கருத்து : பால் தாக்ரே ஆதரவு
அசாம் கலவரத்திற்கு காங்கிரசின் ஓட்டுவங்கி அரசியலே காரணம் என்றும், இதற்கு இதற்கு காரணமான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, சட்டவிரோத அரசு என்று பார்லிமென்டில் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பதால், அந்த வார்த்தையை அத்வானி திரும்பப் பெற்றார். இந்நிலையில், அத்வானி கூறிய சட்டவிரோத அரசு கருத்திற்கு சிவசேனா தலைவர் பால் தாக்ரே ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் இத்தகவலை, அவரது கட்சி பத்திரிகையான சாம்னாவில் குறிப்பிட்டுள்ளார்.