மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
சிவகங்கை, இளையான்குடியில் விவசாய நிலங்களில் பயிர்களை பாழ்படுத்துவதாக கூறி, 7 மயில் களை விஷம் வைத்து கொன்ற விவசாயி நாகராஜனை, வனத்துறையினர் கைது செய்தனர்.
இளையான்குடி அருகே பிச்சன்குறிச்சியை சேர்ந்த விவசாயி நாகராஜ். இவர் வயலில் கீரை விவசாயம் செய்துள்ளார். கீரையை மயில்கள் பாழ்படுத்தின. ஆத்திரமுற்ற நாகராஜ், நேற்று முன்தினம் இரவு நெற்பயிருடன் "மோனோகுரோடோபாஸ்' விஷத்தை கலந்து வயலில் வைத்தார். அதை சாப்பிட்டு 7 மயில்கள் தோட்டத்திலேயே இறந்து கிடந்தன.
தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராகேஷ்குமார் ஜெகானியா உத்தரவுபடி, வன சரக அலுவலர் ஜெபாஸ், மயில்களை கைப்பற்றினர். நாகராஜை கைது செய்யப்பட்டார்.