அண்மைச் செய்திகள்
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு || ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு ||
சிறப்பு கட்டுரை
புலிக்குட்டிக்கு வீரவணக்கம்! - ஐ.லியோனி
......................................
சூதாட்டத்தில் தமிழக வீரர்கள்!
......................................
பிரபாகரன் படத்துக்குத் தடை! மனம் மாறிய "ஈழத்தாய்'!
......................................
மே-18 தமிழினப் படுகொலை நாள் - நினைவேந்தல் கூட்டம்!
......................................
பேசும் படம்...!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! வீரர்களை சிக்க வைத்த....
......................................
பா.ம.க.வுக்குத் தடை! ஜெ. ஆபரேஷன்!
......................................
கவிதையல்ல; கண்ணீர்ப் பொழிவு!
......................................
ஊதாரிகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை - சீமான் பேட்டி!
......................................
திருப்பதியை கலக்கிய முதல்வரின் ...
......................................
கூட்டணி மாறுகிறேனா? -தொல்.திருமா.
......................................
இரண்டு ஆண்டு! சொன்னபடி நடந்தாரா ஜெயலலிதா...?
......................................
அம்மாவின் மதுபானக்கடை - விஜயகாந்த் சவால்!
......................................
இன்று ராமதாஸ்! நாளை திருமாவளவன்! -ஜெ
......................................
’அந்த நாள் வரவேண்டும்’ - ராமதாஸும்! திருமாவும்!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 8, ஆகஸ்ட் 2012 (8:58 IST)



       ரு நிகழ்வுக்கு முன்பாக அது பற்றி ஊடகங்களில் இந்தளவு எதிர்ப்பும் கேலியும் வெளிப்பட்டதில்லை. விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்வுக்கான வேலைகள் வெகுவேகமாக நடந்தபடி இருக்கின்றன. நாள்தோறும் நக்கல் கமெண்ட்டுகள் வெளிப்பட்டாலும், நடத்தாமல் விடப்போவதில்லை என்று டெசோ மாநாட்டில் உறுதியாக இருக்கிறது தி.மு.க தலைமை.

தமிழீழம் என்பது தன்னுடைய நிறைவேறாத கனவு என்றும், அந்தக் கனவு நிறைவேறுவதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மேடைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் கலைஞர். ஆகஸ்ட் 12-ல் டெசோ மாநாடு என்றும் அறிவித்தார். இந்த மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்குவதற் காக ஜூலை 16 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "மாநாட்டில் தமிழீழம் பற்றிய தீர்மானம் இடம்பெறாது' என்றார். அப்புறம் எதற்கு மாநாடு? என்ற கேள்வியை தமிழீழ ஆதரவாளர்கள் கேட்டனர். கலைஞரின் இந்த அறிவிப்பு, ஈழ ஆதரவாளர்களிடம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.



விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்ததுடன், தமிழீழ விடுதலையை ஆதரிப்பதென்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் சுற்றறிக்கை விட்டது. இந்த சுற்றறிக் கைக்குப்பின், சென்னையில் கலைஞரை சந்தித்த ப.சிதம்பரமும் இது பற்றி வலியுறுத்தினார். ப.சி சந்தித்துச் சென்ற மறுநாள் தான், "டெசோ மாநாட்டில் தமி ழீழத் தீர்மா னம் இல்லை' எனக் கலைஞர் அறிவித்தார்.


"இறையாண்மைக்கு எதிராக, மத்திய அரசில் அங்கம் வகித்துள்ள தி.மு.க ஒரு மாநாட்டை நடத்தினால் அது சட்டரீதியாக வும் அரசியல்ரீதியாகவும் சிக்கல்களை உருவாக்கும். டெசோ மாநாட்டுக்கு இந்திய  அளவிலான தலைவர்களும் இலங்கை மற்றும் பிறநாடுகளின் பிரதிநிதிகளும் அழைக்கப் பட்டுள்ளனர். இறையாண்மைக்கு எதிரான மாநாடு என்றால் இவர்கள் கலந்துகொள் வதில் பிரச்சினை ஏற்படும். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருவதற்கு அனுமதி கிடைக் காது. அதனால்தான் தமிழீழத் தீர்மானம் கைவிடப்பட்டது' என்றும் "இது ஒரு ஸ்ட்ரேட்டஜி' என்றும் டெசோ அமைப்பில் இடம்பெற்றுள்ளவர்கள் தெரிவித்தனர். எனினும், டெசோவில் தி.மு.க.வுடன் கை கோர்த்துள்ள தி.க., விடுதலைச்சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளின் தொண்டர்களிடமே, இந்தத்  தீர்மானம் கைவிடப்படுவது பற்றி விமர் சனங்கள் எழுந்தன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :