நிரம்புகிறது கிருஷ்ணராஜசாகர் அணை
கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக பெய்யத்தொடங்கியுள்ளது. தாமதமானாலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. பெங்களூர், சிமோகா, தட்சின கன்னடா, குடகு, உடுப்பி, சிக்மகளூர், ஹாசன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்யும் இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் ஒரு சில நாட்கள் நீடித்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.