அத்வானி கணித்திருப்பது கூட்டணியைப் பிரிக்கும் முயற்சி: லாலு பிரசாத் யாதவ்
மக்களவை தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளை சாராத ஒருவர் பிரதமராகும் வாய்ப்பிருப்பதாகக் பாரதீய ஜனதா தலைவர் அத்வானி கணித்திருப்பது, கூட்டணியைப் பிரிக்கும் முயற்சி என ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசும்போது, ‘தேர்தலில் வாக்குகள் சிதறலாம். ஆனால் இப்போதெல்லாம் தேர்தல்களில் வகுப்புவாத சக்திகளுக்கும், மதசார்பற்ற சக்திகளுக்குமிடயேதான் போட்டி காணப்படுகிறது. ஆனால் வகுப்புவாத சக்திகள் கூட்டணியைப் பிரிக்கவே முயற்சி செய்யும். அத்தகைய சூழல்களில் மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று திரளும். எனவே மூன்றாவது அல்லது நான்காவது அணி அமைவது சாத்தியமில்லாதது. தேர்தலில் மக்கள் மீண்டும் வகுப்புவாத சக்திகளைப் புறக்கணிப்பர். எனவே மதசார்பற்ற சக்திகள் வென்று ஆட்சி அமைக்கும்’ என லாலு கூறியுள்ளார்.