பலாத்காரம் செய்து ஆற்றில் வீசப்பட்ட பெண்: நீந்தி கரையேறி உயிர் தப்பினார்: காதலன் கைது
கட்டாக்கில் கான் நகரில் வசித்து வந்த 19 வயது பெண்ணை ஏமாற்றி காரில் அழைத்துச் சென்ற அவளது காதலன், தனது நண்பனுடன் சேர்ந்து அவளை காரில் வைத்து பலாத்காரம் செய்து, மகாநதி ஆற்றில் தூக்கி எறிந்தான். ஆற்றில் வீசினால் அவள் இறந்துவிடுவாள் என்று எண்ணி நிம்மதியாக வீடு திரும்பினான்.
ஆனால், ஆற்றில் வீசப்பட்ட பெண், கடும் சிரமப்பட்டு, 2 மணி நேரம் போராடி நீதி கரையேறி அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்று உதவி கேட்டாள். அவளை பத்திரமாக பௌத் மருத்துவமனையில் அனுமதித்த கிராமத்தினர் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.
காவல்துறையிடம் பெண் அளித்த தகவல்களைக் கொண்டு குற்றவாளிகள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.