அண்மைச் செய்திகள்
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு ||
தமிழகம்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (12:51 IST)



லஞ்சம் கேட்டு நெருக்கடி: பத்திர எழுத்தர்கள் புகார்: சார்பதிவாளர் மறுப்பு



நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சார் பதிவாளர் முத்துசாமியும் அலுவலக உதவியாளர் கணேசன் ஆகியோர் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டு மிரட்டுகின்றனர் என மாவட்டக் கலெக்டர் செல்வராஜ் எஸ்.பி. பதிவு துறையின் மாவட்ட பதிவாளர் ஆகியோர்களுக்கு பத்திர எழுத்தர்கள் புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

அவர்களின் புகார் மனுவில், சார்பதிவாளர் முத்துசாமி ஏழு லட்சமும், அலுவலக உதவியாளர் கணேசன் மூன்று லட்சமும் கையூட்டு கொடுத்துத்தான் இங்கேவந்துள்ளோம். எனவே, பத்திரப்பதிவுக்கு வருகின்ற நபர்களிடம் மதிப்புக்குத்தக்கவாறு ஒரு தொகையை எங்களுக்கு வாங்கித்தர வேண்டும் என்று மிரட்டலோடு நெருக்கடி கொடுக்கின்றார்கள். எதிர்த்துப் பேசினால் உங்களின் மீது எங்களின் வகையாட்களைக் கொண்டு தீண்டாமை வழக்கு பதிவு செய்வோம் என்பதோடு தரமறுத்தால் உங்களின் பத்திர எழுத்து உரிமங்களை ரத்துசெய்து விடுவோம் தொழிலே செய்யமுடியாது என அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.


சாதாரண ரசீது, வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கும் இவ்வளவு மாமூல் என பிக்ஸ் பண்ணுகிறார்கள். எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று மிரட்டுகின்றார்கள். இதனால் எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம் என சங்கரன்கோவில் வெங்கடேசப்பெருமாள், ராமசாமி, திருவள்ளுவர், கோமதிநாயகம், ராஜேஸ்வரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்களின் குற்றச்சாட்டு குறித்து சார் பதிவாளர் முத்துசாமி கூறியதாவது,

ஆலயங்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் பொருட்டு நிலுவையாக உள்ள நிலங்களை சட்டப்படி பதிவு செய்யமுடியாது. ஆனால் பத்திர எழுத்தர்கள் இதனை பதிவு செய்யவேண்டும் என நிர்ப்பந்தித்தனர். நான் சட்டச்சிக்கலை சொல்லி மறுத்தேன் அதற்காக அவர்கள் என் மீது தகாத குற்றச்சாட்டை வைக்கின்றனர் என்றார்.


படம்: ராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Natarajan Country : United States Date :8/8/2012 12:08:29 AM
நம் நாட்டில் வேலை வாய்ப்பு பெருக வேண்டும் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டுமானால் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளாக இவர்களுக்கு வேலை கொடுக்கலாம். ஒவ்வொரு அலுவலரின் பக்கத்திலும் சாமரம் வீசுவது போல இருவர் நிற்கலாம். அரசு வேலை வாய்ய்பு இரு மடங்காகும். லஞ்சமும் ஒழியும்.இவர்களும் அவர்களுடன் சேர்ந்து லஞ்சம் வாங்க ஆரம்பித்தால் மூன்றாவதாக ஒரு அலுவலரை நியமிக்கலாம்.சின்ன அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலகம் வரையிலும் இந்த வேலை வாய்ப்பு நல்ல பலனைத் தரும். அரசு அலுவலர்கள் வீட்டிலும் லஞ்சம் வாங்க ஆரம்பித்தால் அங்கும் கண் காணிப்பு அலுவலர்களுக்கு வேலை கொடுக்கலாம். தெருக்களிலும் மற்று இடங்களிலும் வாங்க ஆரம்பித்தால் அவர்களை நிழல் போல தொடர்ந்து கண் காணிக்க மேலும் பலருக்கு வேலை கொடுக்கலாம்.
Name : Kamalar Date :8/7/2012 8:52:17 PM
எந்த சார்பதிவாளர் அலுவலகம் லஞ்சமின்றி செயல்படுகிறது ? ஒட்டுமொத்த சார்பதிவாலர்களும் ஒரு பத்திரத்திற்கு இவ்வளவு என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் இது சரியில்லை அது சரியில்லை என்று பதிவு செய்யாமல் அலைகழிப்பர்கள். லஞ்சம் வெட்டுங்கள் உடனே உங்கள் வேலை நடக்கும்.
Name : S Manikantan Date :8/7/2012 7:48:13 PM
எல்லா சார் பதிவாளர் அலுவகங்களிலும் லஞ்சம் ஒரு சட்டமாகவே நடந்துகொடிருக்கிறது, தற்சமயம் பத்திர எழுத்தர்கள் எடுத்த முடிவை பாராட்டுகிறேன், மேலும் இதுபோல் எல்லா பத்திர எழுத்தாளர்களும், மக்களும் செயல்பட்டால் .லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
Name : MANASHATCHI Country : United States Date :8/7/2012 1:37:26 PM
சார் அங்கே லஞ்சம் வாங்குறாங்க இது உண்மை ,அதுமட்டும்மில்ல டிரைவர் license வாங்குற இடத்திலும் அங்கும் லஞ்சம் வாங்குறாங்க ஒரு license 2௦௦ ரூபாய் வாங்குறாங்க, ப்ளீஸ் தயவு செய்து எதாவது செய்யுங்க, குருவிகுளம் VAO ஆபீஸ்,திருவேங்கடம் RI OFFICE லஞ்சம் வாங்குறாங்க