நேபாள் பஸ் விபத்து: 12 பேர் பலி நேபாளில் புத்தவால் பகுதியில் இருந்து காத்மண்ட் நோக்கி வந்த பயணிகள் பஸ் எதிர்பாராத விபதமாக சாலையோரம் இருந்த ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் காத்மண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.