இந்தியா–இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான ஒரே ஒரு சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நாளை நடக்கிறது.
அடுத்த மாதம் இலங்கையில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இறுதி அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் போட்டி இது.
இரு அணிகளும் இதுவரை 4 முறை 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென் கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.