வேலூர் : கல்லால் தாக்கி இளம்பெண் கொலை
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி அருகே உள்ள ஜெயந்திபுரம் பச்சையப்பன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35), டைலர். இவரது மனைவி சத்யா (25). இவர் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள மல்லானூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் 1 மகன் உள்ளார்.
செந்தில்குமார் நேற்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார். நேற்று மாலை சத்யா தனது விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளை ஓட்டி வரச் சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் விடிய விடிய தேடினர்.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் சத்யா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவலிங்கம், சப்&இன்ஸ் பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சத்யாவின் தலைமீது பாறாங்கல் போடப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த துணிகள் கிழிக்கப் பட்டிருந்தது.
வளையல்கள் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தது. வெள்ளி கால் கொலுசும் அறுந்துள்ளது. சடலத்தின் அருகே 2 மதுபாட்டில்களும், 1 செல்போனும், ரத்தக்கறை படிந்த பாறாங் கல்லும் இருந்தது.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் மற்றும் மோப்ப நாய் வரவழைக் கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
இளம்பெண் சத்யாவை யாராவது மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.