மனைவியின் மருத்துவ பில்லை கட்ட மறுத்து கணவன் தற்கொலை
தூக்கிட்டு தற்கொலை முயன்ற மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை டிஸ்சார்ஜ் செய்ய ரூ.18000 பில் கட்டசொன்னதால் கணவன் தற்கொலை செய்துகொண்டார்.
நாகை மாவட்டம் பூம்புகார் கீழவானகிரி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(30). கொத்தனார். இவரது மனைவி வேம்பு(23). இருவரும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது.
கடந்த 2 வாரமாக தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வேம்பு கடந்த 2 வாரத்துக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கொள்ளிடம் ஆஸ்பத்திரியில் சிக்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
அவரை டிஸ்சார்ஜ் செய்வதற்கு ரூ.18 ஆயிரம் கட்டுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவி த்தனர். ஆனால் விக்னேஷ் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே வேம்பு தனது தாய் திலகவதி மூலம் பூம்புகார் போலீசில் புகார் கொடுத்தார். அதில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், ஆஸ்பத்திரி பில் கட்ட சொல்லும்படியும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசாரும் வின்னேஷை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ரூ.9000 கட்டுவதாக போலீசில் கூறிவிட்டு சென்ற விக்னேஷ் திரும்பிவரவில்லை.
இந்நிலையில் அவர் ஏராபாளையம் காவிரி கரையில் மரத்தில் நேற்று மாலை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பூம்புகார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.