பார், ஓட்டல்களில் கேமரா பொருத்த உத்தரவு பெங்களூரில் உள்ள பார், ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த வாரம் ரிசார்ட் ஒன்றில் பிறந்த நாள் விழா கொண்டாடிய இளம்பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடியோவில் பதிவான காட்சிகள் மூலம், தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கண்டுபிடித்து, போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக நகரில் உள்ள அனைத்து பார்கள், ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி உத்தரவிட்டுள்ளார்.