அண்மைச் செய்திகள்
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது || காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை || பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர் ||
இலங்கை
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (12:50 IST)

காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்: சீமான்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தலைமையில் 108 பேர் கொண்ட இந்திய தொழில் முனைவோர் குழு இன்றைக்கு கொழும்பு செல்கிறது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போது 4.5 பில்லியன் டாலர்களாக உள்ள இரு நாட்டு வர்த்தகத்தை 9 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதும், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே நிலவிவரும் ராணுவ உறவை மேலும் பலப்படுத்தும் திட்டத்துடன் இக்குழுவின் பயணம் இருக்கும் என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக அறவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக அமைச்சகமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து மேற்கொள்ளும் இந்த பயணம், ஒட்டுமொத்தமாக தமிழர்களை அவமதிக்கும் நடவடிக்கையாகும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரை தொடங்கிய ராஜபக்சவின் இன வாத அரசுக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழின அழிப்பை முழுமையாக செய்து முடிக்கத் துணை நின்ற மத்திய காங்கிரஸ் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கை அரசுடன் தனது உறவை பலப்படுத்திக்கொள்ள தமிழர் நலனை பகடையாக்கி வருகிறது.


தமிழர்களின் நலனை, அவர்களுக்கு அரசியல் சம உரிமை பெற்றுத் தருவோம் என்று கூறிக்கொண்டு, இலங்கை தமிழர் சிக்கலில் தலையிட்ட மத்திய அரசு, இதுவரை ஈழத் தமிழர்களுக்கு பெற்றுத் தந்த உரிமை என்ன? ஒன்றுமில்லை. ஆனால், தமிழினத்தை அழிக்கத் துணை நின்றதன் மூலம் இலங்கை அரசுடன் உருவாக்கிக்கொண்ட நட்பை பயன்படுத்தி, இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் அங்கு தொழில் தொடங்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இப்படிப்பட்ட ஒரு முயற்சியைத்தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர், சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் முன்னெடுக்க முயற்சித்தது. அதனை நாம் தமிழர் கட்சியும், தமிழின உணர்வு அமைப்புகளும் இணைந்து போராடி முறியடித்தன. இப்போது மீண்டும் ஒரு முயற்சியை இந்திய வர்த்தக அமைச்சர் மேற்கொள்கிறார்.


இலங்கையின் தமிழினத்தை அழித்தொழித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசு வாக்களித்தது வெறும் கண்துடைப்பு என்பதை மத்திய அரசின் இப்படிப்பட்ட தமிழின துரோக நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இதனை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.


மத்திய அரசு என்பது கடந்த காலங்களிலும் தமிழினத்திற்கு எதிராகவே செயல்பட்டது, இதற்கு மேலும் அதன் போக்கு தமிழினத்திற்கு எதிராகவே இருக்கப்போகிறது என்பதற்கு இந்த வர்த்தகப் பயணம் மேலும் ஒரு சான்று. மத்திய ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசை அகற்றாமல, தமிழினத்திற்கு விடிவு பிறக்காது என்பதை கருத்தில் கொண்டு, மக்களவைத் தேர்தலுக்காக தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியுறச் செய்தனர். விரைவில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : stalin Date :8/4/2012 12:12:39 AM
சூப்பர்.
Name : subramani Country : Australia Date :8/3/2012 5:34:17 PM
காங்கிரசை தோற்கடிப்பது மட்டுமல்ல பூண்டோடு ஒழிக்கவேண்டும்.மறுபடியும் இந்தியாவில் வளரவே கூடாது. தமிழினத்தின் பெருமையை உலகம் அறிய வேண்டுமானால் காங்கிரஸ் ஒழிக்கப்படவேண்டும். காங்கிரசுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்க்கடிக்க வேண்டும்.
Name : Venki Date :8/3/2012 4:16:01 PM
என்ன தமிழ்நம்பி, சீமான் அதிமுக பத்தி கொடுத்த பேட்டி எல்லாம் படிக்கச் மாட்டிங்க போல!!
Name : tamilnambi saudiarabia Date :8/3/2012 1:20:39 PM
காங்கிரெஸ் கூட்டணி தமிழ் இன துரோக கூட்டணி சரி நீங்க சொன்னீங்களே மேடைக்கு மேடை இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மல்ரும்னு இப்போ எந்த அளவு ஈழம் மலர்ந்து இருக்கு தமிழக மக்களின் கண்துடைப்புக்காக வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வேறு என்ன செய்துவிட முடிந்தது இப்போது மத்தியில் பாரதிய ஜனதா வந்துவிட்டால் நீங்கள் என்ன கிழித்துவிட போகிறீர்கள் மேடைக்கு மேடை தமிழ்நாட்டில் காங்கிரெஸ் கூட்டணியை எதிர்த்து கூப்பாடு போடுவதற்கு உங்களுக்கு ஒரு நல்ல தொகை கிடைக்க போகிறது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை இலங்கை தமிழர்கள் குறித்து பேசுவதற்கு வேண்டி வெளி நாடுகளில் இருந்து வரும் தொகையோடு வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக நீங்கள் பெறப்போகும் தொகை நிச்சயம் கோடிகள் என்பதே உண்மை இப்போதே நீங்கள் வசனங்களை தயார் செய்து வைத்துள்ளீர்கள் என்பதும் உண்மை உங்கள் முகத்திரையை கிழிக்க இந்த முறை நாங்களும் தயார்