வேன்-லாரி மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த வேனும், திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளாயின.
இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பண்ணக்காடு பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் வேனில் வந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.