விரைவில் இந்திய திரைப்பட ஆணையம் துவக்கம்
திரைப்படங்களை இயக்குவது தொடர்பாக நாடு முழுவதும் பொது விதிகளை கொண்டு வர இந்திய திரைப்பட கமிஷன் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக இயக்குனர் நிருபமா கேட்ரு தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த அமைச்சகம் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவும் முடிவு செய்திருப்பதாக நிருபமா தெரிவித்துள்ளார்.