அரசியல் கட்சி தொடங்கலாமா? கருத்து கணிப்பு நடத்துகிறது ஹசாரே குழு!
அன்னா ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கம், மாற்று அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்துகிறது.
இதுதொடர்பாக, தனது இணையதளத்திலும், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்திலும் பொதுமக்களிடம் 2 கேள்விகளை கேட்டுள்ளது.
1. தற்போதைய அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்களா? 2. அன்னா ஹசாரே, மாற்று அரசியல் இயக்கத்தை தொடங்க வேண்டுமா?
இந்த 2 கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்குமாறு ஹசாரே இயக்கம் கேட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் பதிலை எதிர்பார்ப்பதாக உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே கூறினார்.