பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள்: உள்துறை செயலாளரிடம் தாக்கல்
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை 2 வாரத்துக்குள் வகுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது.
இந்த குழுவில் போக்குவரத்து இணை ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநில போக்குவரத்து ஆணை யரக உதவி செயலாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் லட்சுமிபதி, நெல்லை போக்குவரத்து துணை ஆணையர் பாலன், சென்னை கிழக்கு ஆர்.டி.ஓ. பாஸ்கரன், பூந்தமல்லி மோட்டார் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த குழு ஆய்வு செய்து புதிய விதிமுறைகளை தயாரித்தது. பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறையை போக் குவரத்து கமிஷனர் பிரபாகர்ராவ் இன்று உள் துறை செயலாளர் ராஜகோபாலிடம் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கை 20 பக்கம் கொண்டதாக இருந்தது. வருகிற 9-ந்தேதிக்குள் பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறையை தாக்கல் செய்யவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் இந்த அறிக்கை அதற்கு முன்னதாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரி கிறது.