ஜெயலலிதா அடுத்தவாரம் சென்னை திரும்புகிறார்
முதலமைச்சர் ஜெயலலிதா ஜூன் மாதம் 21-ந்தேதி கொடநாடு சென்றார். அங்கிருந்து அரசு பணிகளை கவனித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலையொட்டி கடந்த மாதம் 18-ந் தேதி ஜெயலலிதா சென்னை வந்தார். அன்று மாலை நடந்த அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
19-ந்தேதி காலையில் புதிய அமைச்சர் தோப்பு வெங் கடாசலம் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார். பின்னர் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போட்டார். அன்று மதியம் மீண்டும் கொடநாடு சென்றார். இன்னும் சில தினங்கள் அவர் கொடநாட்டில் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.
கொடநாட்டில் இருந்து அடுத்த வாரம் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.