மம்தா பேஸ்ஃபுக்கில் லட்சம் பேர்
மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, தனது பேஸ்புக் கணக்கில், லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். திரிணாமுல் காங். தலைவரும்,முதல்வருமான மம்தா, தற்போது சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டிவருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தான் தனது பேஸ்புக் கணக்கினை துவக்கினார்.
அப்போது ஜனாதிபதி தேர்தலில் இவரின் ஆதரவு குறித்து மிகுந்த எதிர்ப்பு ஏற்பட்ட வேளையில்,இவர் தனது கருத்தினை பேஸ்புக் வாயிலாக தெரிவித்து வந்தார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போது இவரின் பேஸ்புக் கணக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நண்பர்களாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மக்களிடம் தொடர்பு வைத்து கொள்ள சமூக வலைதளமான பேஸ்புக்கினை பார்க்க தினமும் குறைந்தது அரை மணிநேரம் செலவிடுவதாக, திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் டெரிக் ஓ. ப்ரெய்ன் தெரிவித்துள்ளார்.