பள்ளத்தில் விழுந்த காட்டெருமை பரிதாப பலி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், தாளவாடி வனப்பகுதியில், வனத்துறை ரேஞ்சர் சித்தையன் தலைமையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிக்கள்ளி வனம், பாலப்படுகை பழங்குடியினர் கிராமம் அருகே உள்ள, ஓடையில், பத்து வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை இறந்து கிடந்தது.
ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், மாவட்ட வனஅதிகாரி சதீஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த காட்டெருமையை, தாளவாடி கால்நடை டாக்டர் அழகேசன் பிரேத பரிசோதனை செய்தார். பள்ளத்தை தாண்டும்போது தவறி விழுந்து காட்டெருமை இறந்தது தெரியவந்தது.