எனது மகளை டாக்டராக்க ஆசைபட்டேன்: பஸ் விபத்தில் எல்கேஜ மாணவின் பலியான தந்தை கண்ணீர்
வாணியம்பாடியை அடுத்த மாராபட்டில் உள்ள எம்போசோ மெட்ரிக் பள்ளியில் படித்துவந்த ஈச்சம்பட்டை சேர்ந்த குமாரின் மகள் சுஜிதா (வயது 3) 27.07.2012 அன்று பள்ளி பஸ்சில் இருந்து இறங்கியபோது அதே பஸ் மோதி இறந்தார்.
இதனால் அந்த கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை குமார் கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனது சொந்த ஊர் ஈச்சம்பட்டு நான் வாணியம்பாடியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு சுவேதா (வயது 5) சுஜிதா (3) என்ற 2 மகள்கள். இருவரும் மாராபட்டு எம்போசோ மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தனர். சுவேதா யு.கே.ஜி. சுஜிதா எல்.கே.ஜி.யும் படித்துவந்தனர். 2 பேரும் நன்றாக படித்தனர்.
பள்ளி படிப்பு முடித்ததும் அவர்கள் வருங்காலத்தில் டாக்டர், என்ஜினீயருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் அநியாயமாக எனது இளைய மகள் சுஜிதா பள்ளி பஸ்சில் சிக்கி இறந்துவிட்டாள். அவளது உயிரை பறித்துவிட்டனர். எனது மகள் சாவுக்கு காரணமான டிரைவர், கிளீனர் பள்ளி நிர்வாகத்தை தண்டிக்க வேண்டும்.
வரலட்சுமி நோன்பையொட்டி எங்களது கிராமத்தில் விசேஷ பூஜை நடந்தது. அந்த நேரத்தில் இப்படி துயர சம்பவம் நடந்துவிட்டது. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.