நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி! 5 பேர் படுகாயம்!
தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகில் உள்ள சவலூர் என்ற இடத்தில் பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டு இருந்த டவுன் பஸ் மீது, பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்தார். மேலும் இந்த விபத்தில் படுபாயம் அடைந்த 5 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.