குட்டைப் பாவாடையால் பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது: திரிணமுல் எம்.எல்.ஏ
குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு செல்வதால் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக திரிணமுல் கட்சி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
வங்காள மொழி நடிகரும், திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான சிரஞ்சித் அகா தீபக் சக்ரவர்த்தி, செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனது பர்கானா மாவட்டத்தில் இளம் பெண்கள் குட்டைப்பாவாடை அணிவதும், குறைந்த உடை உடுத்துவதும் இளைஞர்களின் மனதைக் கெடுத்து பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கக் காரணமாகிறது.
பெண்களை கேலி செய்வது என்பது இன்று நேற்றல்ல, நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் அது தற்போது அளவுக்கு அதிகமாகப் பெருகி விட்டதற்கு பெண்களே காரணம். பெண்களை கேலி செய்வது கண்டிக்கத்தக்கதுதான். இருந்தாலும், பெண்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராவணன் இல்லாமல் ராமாயணம் இல்லை என்றார்.
அவரது தொகுதியில் பெண் ஒருவர் அவமானப் படுத்தப் பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.