ராகுல்காந்தி எந்த பதவிக்கு வந்தாலும் வரவேற்போம்: ப.சிதம்பரம்
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியிலோ, மத்திய அரசிலோ உயர் பதவி வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இணைந்துள்ளார். ராகுல் காந்தியால் எந்த பொறுப்பையும் சிறப்பாக கவனிக்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது ப.சிதம்பரம் கூறுகையில்,
அரசு அலுவலகமாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும், பாராளுமன்றமாக இருந்தாலும் ராகுல் காந்தியால் நன்றாக செயல்பட முடியும். அவர் எந்த பதவிக்கு நியமிக்கப்பட்டாலும், அது கட்சித்தலைவர் சோனியாகாந்தி, பிரதமருடன் நன்கு ஆலோசனை நடத்தியபிறகே முடிவு செய்யப்படும். அப்படி எந்த பதவிக்கு அவர் வந்தாலும் நாங்கள் வரவேற்போம்’ என்றார்.