திருப்பரங்குன்றம் கோயில் யானை மரணம்
மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் யானை ஔவை இன்று (28.07.2012) மாலை மரணமடைந்தது. அதற்கு வயது 53. யானை, மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
இதனால் கோயில் நடை அடைக்கப்பட்டது. நாளை யானையின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகே மீண்டும் கோயில்நடை திறக்கப்படும் என ஆலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்கள் அதிகளவில் வந்து, யானையின் உடலுக்கு மாலை போட்டு, தங்களது மரியாதையைச் செலுத்தியவண்ணம் உள்ளனர்.