அசாமில் சகஜ நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: மன்மோகன் சிங்

அசாம் கலவரம் பாதித்த கோக்ரஜர் பகுதிகளை சுற்றிப்பார்த்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கு உடனடி சகஜ நிலை திரும்பவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மூகாம்களை சுற்றிப்பார்த்த அவர் இங்கு நிகழ்ந்துள்ள இந்த மோசமான கலவரம் தன்னை மிகவும் வருத்தியுள்ளது என்றும் இந்த நேரத்தில் உங்கள் வருத்தங்களை நாங்கள் பகிர்ந்து கொள்வதோடு உங்களுடன் என்றும் துணை நிற்ப்போம் என உறுதியளித்தார்.
இந்த பிரச்னை மிக சிக்கலான விஷயம் என்றும் அமைதி திரும்பிய உடன் இது குறித்து ஆராயப்படும் என்றார். மேலும் பேசிய அவர் நாம் எல்லாம் இந்தியர்கள். எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். குற்றம்சாட்டுவதும் சாட்டப்படுவதற்குமான நேரம் இதுவல்ல, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
இங்கு உடனடியாக அமைதி திரும்ப வேண்டுமென்பது முதல் குறிக்கோள் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்தும் உதவிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.