போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவர் என்று ஒருபோதும் அறிவிக்கவில்லை: ஹசாரே
நான் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோமே தவிர, மக்கள் அனைவரும் ஈடுபடுவர் என்று ஒருபோதும் தாங்கள் அறிவிக்கவில்லை என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஹசாரே கூறியதாவது,
ஊழல் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியே தாங்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளோமே தவிர, மற்ற ஆதாயத்திற்காக அல்ல. தங்களது போராட்டம், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது என்று மத்திய அரசு கூறிவருவது உண்மைக்கு புறம்பானது. தாங்கள் அளித்துள்ள ஊழல் எம்.பி,க்கள் பட்டியலில் பா.ஜ.வினரும் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் தாங்கள் எக்கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது மற்ற கட்சிகளின் தூண்டுதலின் பேரிலோ செயல்படவில்லை. நான் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோமே தவிர, மக்கள் அனைவரும் ஈடுபடுவர் என்று ஒருபோதும் தாங்கள் அறிவிக்கவில்லை. எனவே, மக்கள் கூட்டம் பற்றி தாங்கள் கவலைப்படத் தேவையேயில்லை என்று அவர் மேலும் கூறினார்.