யானை அல்ல. குதிரை: ஞானதேசிகன்
மதுரையில் இன்று (28.07.2012) காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கு அழைப்பு விடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளதாவது:
சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் பெற்ற சில பின்னடைவுகளை கணக்கில் வைத்து காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்து விட்டது என கனவு கண்டோர் பலர்.
காங்கிரஸ் கட்சி இனி எழாது என ஆருடம் சொன்னவர் பலர். காங்கிரஸ் கட்சி யானை அல்ல. குதிரை. உடனே எழுந்து நிற்கும் என்பதை பல நேரங்களில் காட்டி விட்ட நிலையில் யானையின் பலமும், குதிரையின் வேகமும் இக்கட்சிக்கு உண்டு என்பதை காட்டும் விழாவாக காமராஜர் பிறந்த நாள் விழா கூட்டம் நடக்கும்.
இலவச கல்வி, மதிய உணவு, சீருடை, கல்வி கடன் கொடுத்தவர் காமராஜர். தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வருவதற்கு காரணாக இருந்தவர். பல அரசியல் தலைவர்களை உருவாக்கியவர். காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம். இப்பொற்காலம் மீண்டும் வராதா என ஏங்கும் தொண்டர்கள் சங்கமிக்கும் விழா இது, என தெரிவித்துள்ளார்.