அ.தி.மு.கவின் வலிமையான நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப் பட்டவர் செங்கோட்டையன். ஜா-ஜெ அணிகளாக அ.தி.மு.க பிரிந்த காலத்திலேயே ஜெ.வின் தீவிர விசுவாசி. ஜெ.வின் சுற்றுப்பயணங்களை ஒருங்கிணைத்தவர். 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
ஜூலை 18-ந் தேதி அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைமை நிலைய
செயலாளர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக நீக்கினார் ஜெ.2011-ல்
அ.தி.மு.க பெரும்வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோதே, செங்கோட்டையனுக்கு
வேளாண்துறைதான் ஒதுக்கப்பட்டது. பிறகு, அதிலிருந்து மாற்றப்பட்டு ஜூனியர்
மந்திரிகள் கவனிக்கும் தகவல்- தொழில்நுட்பத்துறைக்கு அமைச்சரானார்.
கார்டனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டபிறகே
செங்கோட்டையனுக்கு வலுவான வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டது. கல்தா
கொடுக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு பதிலாக அமைச்சர் பதவியிலும் கட்சிப்
பொறுப்பிலும் அதே ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு
வெங்கடாஜலம் நியமிக்கப் பட்டு 19-ந்தேதி பதவியேற்றார். செங்கோட்டையன்
நீக்கத்திற்கான காரணங்களாக, சசிகலாவின் தலையீடு என்றும், ராவணனின்
கைங்கர்யம் என்றும், செங்கோட்டையனின் குடும்ப விவகாரம் என்றும் இன்னும் பல
காரணங்களும் விவாதிக்கப் படுகின்றன. ஆனால், உண்மைக்காரணம் வேறு. அது
நிலமோசடி சம்பந்தமானது.
சென்னையில்
நடந்த அந்த நிலமோசடி தொடர்பாக நக்கீரனுக்கு வந்த ஆவணங்களை கடந்த ஒரு
மாதகாலமாக நாம் கவனமாகப் புலனாய்வு செய்து வந்தோம். நிறைய விவகாரங்கள்.
ஏராளமான பக்கங்கள் என்பதால் வருவாய்த்துறை சட்டத்துறை என பல தரப்பினரிடமும்
அந்த விவரங்களை உறுதிப்படுத்தியபோது, சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள
நிலத்தை வெறும் 32 கோடி ரூபாய்க்கு வாங்கி மோசடி செய்திருப்பதும், இந்த
மோசடியில் தொடர் புடையவர், செங்கோட்டையனுக்கு மிகவும் வேண்டியவர் என்பதும்
ஆவணங்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது.
முழுமையான
விவரங்களுடன், இந்த நிலமோசடி தொடர்பான விரிவான புலனாய்வு செய்தியை எழுதி,
அச்சுக்குக் கொண்டு செல்லும் நிலையில்தான், செங்கோட்டையனின் பதவிப்பறிப்பு
என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் ஜெ.! ஒருமாத காலப்
புலனாய்வின் முடிவில், நக்கீரன் எழுதிய செய்திக் கட்டுரை இதுதான்.யார்
ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் கண்ணை உறுத்திக்கொண்டே
இருந்த நிலம் அது. சென்னை திருவான் மியூர் சிக்னல் அருகே உள்ள அந்த
நான்கரை ஏக்கர் நிலத்திற்காக லோக்கல் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குள்ளேயே
சர்ச்சைகள் வந்தது உண்டு. அப்படிப்பட்ட நிலத்தை சுற்றி தற்போது....