மோதலில் முடிந்த எருதாட்ட திருவிழா :
12,போலீசார் உட்பட 26,பேர் காயம். 142,பேர் கைது
சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தை ஒட்டி அமைந்துள்ளளது நெய்காரபட்டி கிராமம், இந்த கிராமத்தில் உள்ள மூங்கில்புத்து முனியப்பன் கோவில் ஆண்டுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்படும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
சேலத்தின் சுற்றுபகுதியில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான ஊர்களிலிருந்து இந்த விழாவுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெய்காரபட்டிக்கு வருவார்கள். இந்த திருவிழாவின் நிறைவாக எருது பிடிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் இந்த திருவிழாவில் நிறைவாக எருது பிடிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது.
கடந்த ஆண்டு முதல் உச்சநீதித்தின் வழிகாட்டு தலின்படியும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி யோடும், வருவாய் துறை அதிகாரிகள் மேற்பார் வையில் தான் ஜல்லிக்கட்டு.
எருதுபிடித்தல் போன்ற விளையாட்டுகள் நடத்த முடியும் என்று வருவாய் துறை அதிகாரிகள் எருது பிடிக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதை ஒத்துக்கொள்ளாத கிராமமக்கள், நீங்கள் சொல்லு வது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத்தான் பொருந்தும், நாங்கள் நடத்துவது எருத்தாட்டம் நிகழ்ச் சிதான் என்று கூறியதுடன்,
நாங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் எருது பிடிக்கும் நிகழச்சி நடத்துவோம். முடிந்தால் நீங்கள் தடுத்துப்பாருங்கள் என்று கூறிவிட்டனர்.
கொண்டலாம்பட்டி போலீசார் திருவிழாவில் கலந்துகொள்ள எருதுகொண்டு வந்தவர்களை தடுத்ததால் நேற்று முன்தினம் மாலை நெயக்காரப்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், அவர்களோடு பேச்சுவார்த்த நடத்த மாவட்ட ஆட்சியர் அழைத்ததால் சாலை மறியலை கைவிட்டு விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
இரவுவரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து கிராம மக்கள் தாங்கள் ஊருக்கு திரும்பி சென்றுவிட்டனர். நேற்று காலையிலும் பேச்சுவார்த்தை நடந்தது, உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படிதான் விளையாட்டு போட்டிகள் நடக்க வேண்டும் என்று வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால், பொதுமக்கள் இது ஜல்லிக்கட்டு அல்ல எருத்தாட்டம் என்று கூறியபடியே இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதலே நெயக்காரபட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நெயக்காரபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து வழக்கமாக எருதுபிடிக்கும் நிகழ்ச்சிக்கு கொண்டுவரப்படும் 92 காளை மற்றும் எருதுகள் நேற்றும் கொண்டு வந்து ஊர் நடுவில் உள்ள திடலில் கட்டப்பட்டது.
மாவட்ட ஆட்சியர், மகரபூசனம், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா வெங்கடேசன், காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிக்ஸ் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது மாலை நான்குமணிக்கு, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிலர் சாலையில் கற்களையும், மரங்களையும் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு சென்ற போலீசார் சாலைமறியலை கைவிடும்படி பொதுமக்களிடம் கூறியதையடுத்து, பெண்கள் நின்றுகொண்டிருந்த பகுதியிலிருந்து போலிசார் மீது சரிமாரியாக கற்கள் வீசப்பட்டது.
இதில், ஓமலூர் மற்றும் சங்ககிரியிலிருந்து வந்திருந்த இரண்டு பெண் போலிசார் உட்பட 12 போலீசார் காயமடைந்தனர். அதே நேரத்தில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, இரண்டு லாரிகள், மூன்று கண்டைனர் லாரிகள் மீது சாலைமறியலில் எடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்துள்ளனர்.
நிலைமை கட்டுக்கு மீறி சென்றதால், போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலை தொடங்கினார்கள். சாலைமறியலில் எடுபட்டவர்கள் பலமாக தாக்கப்பட்டனர். தாக்குபிடிக முடியாத பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டுவிட்டு மக்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக தப்பிஓடினார்கள்.
இதே நேரத்தில், கோவிலுக்கு அருகில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஊர்த்திடலில் கட்டப்பட்டிருந்த காளை மாடுகளை சிலர் அவிழ்த்து விட்டு விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்து விட்டனர்.
ஏற்க்கனவே ஆத்திரத்திலிருந்த போலிசார், காளை மாடுகளை அவிழ்த்து விளையாட்டு நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை துவக்கினார்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வயது வித்தியாசமில்லாமல் கோவில் பக்கத்தில் இருந்த அனைவரையும் புரட்டி எடுத்துவிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதும், நெயக்கரபடிக்கு அருகில் உள்ள கொண்டலாம்பட்டி-பூலாவாரி செல்லும் சாலையில் சிலர் கற்களை போட்டு தடை ஏற்படுத்தினார்கள் அங்கும் போலீசார் சென்று தாக்குதல் நடத்தியதோடு வஜ்ஜிரா என்ற பொலிசாரின் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்தை கொண்டுவந்து பொதுமகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
பொதுமக்கள் போலீசார் தாக்குதலுக்கு பிறகு, போர்க்களம் போல காட்சியளித்த நெயக்கரபட்டியிலிருந்து தாங்கள் கொண்டுவந்த காளை மாடுகளை திருப்பி கொண்டுபோக மாட்டு உரிமையாளர்கள் அனுமதி கேட்டனர்.
உடனடியாக போலீசார் காளை மாடுகளை பிடித்துகொண்டு போக அனுமதிகொடுத்தனர் படிப்படியாக அங்கிருந்த மாடுகளை ஆட்டோ மற்றும் லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினார்கள்.
நேற்று இரவு நிலவரப்படி போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றங்களுக்கா நெயக்காரபட்டியை சேர்ந்த 142 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்கதல் நடத்திய பலரை கைது செய்ய போலீசார் இன்னும் நெயக்கரபட்டியில் முகாமிட்டுள்ளனர். இதனால், அந்த ஊரை சேர்ந்த பலர் தாங்கள் வீடுகளுக்கு செல்லாமல் தலைமறைவாக உள்ளனர்.