அகில இந்திய வங்கி ஊழியர்கள் `ஸ்டிரைக்' ஒத்திவைப்பு
அகில இந்திய வங்கி ஊழியர்கள் 25-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யுமாறு, தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், டெல்லியில் மத்திய தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. இதில் தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ச. சீனிவாசன் மற்றும் இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வங்கி நிர்வாகம் தங்களது கருத்துக் களை எடுத்துக்கூறியதின் பேரிலும், தொழி லாளர் நல ஆணையாளர் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அறிவுறுத்தியதை தொடர்ந் தும், 25-ந் தேதி நடக்கவிருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தேசிய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் லெ. பாலசுப்பிரமணியன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.