அரசு முத்திரையுடன் லட்டர் பேடு :மோசடி பெண் தலைமறைவு
சேலம், கோட்டை பகுதியை சேர்ந்தவர் உமையாபானு. இவர், கோட்டை பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அந்த பகுதி பொதுமக்களிடம் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்தது.
இது குறித்து, சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில், சேலம் மாவட்ட முஸ்லீம் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மாவட்ட கலெக்டரை தலைவராகவும், மாவட்ட சமூக நலத்துறை, திட்ட இயக்குனர்களை உறுப்பினர்களாகவும் குறிப்பிட்டு, தமிழக அரசு முத்திரையுடன் கூடிய போலி லெட்டர் பேடை உமையாபானு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் பயன்படுத்திய போலி லெட்டர் பேடை குற்றப்பிரிவு போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அந்த லெட்டர் பேடை பயன்படுத்தி, அவர் மேற்கொண்ட மோசடிகள் செய்திருப்பது குறித்தும், மேலும் மோசடிகள் செய்துல்லாரா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை செய்துவருவதை தெரிந்துகொண்ட உமையாபானு தலைமறைவாகி விட்டார்.