ஆசிரியையிடம் மொபைலில் ஆபாசமாக பேசியா இருவர் கைது
சேலம் மாவட்ட, தம்மம்பட்டி உடையார்பாளையத்தில்,தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பயிலுகின்றனர். சில நாட்களாக, இப் பள்ளி நிர்வாகிகளின் மொபைல் ஃபோன்களுக்கு மிரட்டல் எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.
"பள்ளியில் மேனேஜராக உள்ளவரை, பணியில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும்' என, கூறி நிர்வாகிகளை மர்ம நபர்கள் மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.
மேலும்,அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும், பெண் பணியாளர்களின் மொபைல்ஃ போன்களுக்கு தொடர்புகொண்ட அந்த மர்ம நபர்கள், ஆபாசமாக பேசி, தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து, தம்மம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள், பெண் பணியாளர் களின் மொபைல்ஃபோன்களுக்கு வரும் இன் கம்மிங் கால்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந் தனர்.
அதே பள்ளியின் பஸ் கிளீனர் இருக்கும் ராஜா வயது-24, மற்றும் தம்மம்பட்டி, "மைனா' என்ற சி.டி., கடையில் பணியாற்றும் ஊழியர் முரளி வயது-30, ஆகிய இருவரும் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை போலீஸார் கண்டு பிடித்தனர்.
மேலம் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய மொபைல் ஃபோன் மற்றும் சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:
பள்ளியின் பஸ் கிளீனர் ராஜாவும், சி.டி., கடை ஊழியர் முரளியும் நண்பர்கள். பள்ளி மேனேஜரை பழிவாங்க, நிர்வாகிகளை மிரட்டியுள்ளனர். பள்ளி ஆசிரியைகள்,பெண் பணியாளர்களின், மொபைல்ஃபோன் எண்கள் அனைத்தும் ராஜாவுக்கு தெரியும். சபலிஸ்டான இருவரும் வெவ்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மிரட்டல் விடுத்து ள்ளனர் என்றனர்.