வனத்துற்றை அலட்சியம் : புள்ளிமான்கள் உயிரிழப்பு அதிகரிப்பு
வனத்துறையின் அலட்சியப் போக்கால், ராமநாதபுரம் மாவட்டத்தில் புள்ளி மான்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லூர் மற்றும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள பகுதியில், 130க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறையால், இரவில் இவை குட்டி களோடு குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின் றன. தண்டவாளத்தை கடக்க முயலும்போது ரயிலில் அடிபட்டு பலியாவதும், தேசிய நெடுஞ் சாலையில் வாகனம் மோதி உயிரிழப்பதும் தொடர்கிறது. இதுதவிர, இறைச்சிக்காக, சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுவதும் அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், தண்ணீர் தேடி பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் குடியிருப்பில் புகுந்த ஆறு வயது புள்ளிமான், தெரு நாய்களிடம் சிக்கி காயமடைந்தது. இதை அப்பகுதி மக்கள், மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள், மானை காட்டில் விட்ட சிறிது நேரத்தில் இறந்தது. இரண்டு மணிநேரம் தாமதமாக வந்த வனத்துறையினர், உரிய சிகிச்சை அளிக்காததால், மான் இறந்ததாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்ட ரேஞ்சர் கணேசலிங்கம் கூறுகையில், ""மான்களுக்கு தேவையான தண்ணீரை, தொட்டிகளில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.