ஜெயலலிதா முதல் ஆளாக சென்று வாக்களித்தார்
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஓட்டுப்போட்டு வகிறார்கள். தமிழக சட்டசபை உறுப் பினர்கள் சென்னை கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக வாக்களித்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குசாவடியில் எம்.பி. க்கள் வாக்களித்து வருகின்றனர்.