தமிழக வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு. என்.டி.வெங்கடாசலம் நியமனம்
அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று (18.07.2012) மாலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே, வருவாய்த் துறை அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது.
இதையடுத்து தமிழக வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு. என்.டி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 19.07.2012 அன்று காலை 8.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கிறார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெங்கடாசலம்.