| ஜூலை 2012 | | ஞா | திங் | செ | புதன் | வியா | வெ | சனி | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
|
|
|
|
புதன்கிழமை, 18, ஜூலை 2012 (10:29 IST)
வரும் வியாழக் கிழமை (19-ந்தேதி) நள்ளிரவில், தனக்கு கோர்ட் தீர்ப்பு வடிவில்
கண்டம் வர இருக்கும் நிலையில் நித்தி, ஆதீனத்தை கடத்திச் சென்றுவிட்டதாக
ஆதீனம் தரப்பே பரபர புகாரை எழுப்பிவருகிறது.
இது
தொடர்பாக ஆதீனத்தின் நிழலாக 40 வருடங்களுக்கும் மேலாய் இருந்து வருபவரும்
ஆதீனத்தின் மெய்க்காப்பாளருமான கடவுள் குருசாமி நம்மிடம்...
""இப்போது
பல உண்மைகளை நான் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. மதுரை ஆதீனத்திற்கு
நித்தியை இளைய ஆதீனமாக் கும் எண்ணம் அறவே இல்லை. அந்தக் கோணத்தில் அவர்
யோசித்தது கூட இல்லை. எல்லாமே நித்தியானந்தா மெல்ல மெல்ல உருவாக்கிய சதி
நாடகங்கள். பிடதி ஆசிரமத் துக்குப் போகவேண்டும் என்று ஆதீனம்
திட்டமிடவில்லை. ஆலடி அருணா வழக்கில் சிக்கிய பிரபல கல்வியாளர் எஸ்.ஏ.ராஜா,
பெங்களூரில் கட்டியிருக்கும் மெஹா ஷாப்பிங் மால் திறப்பு
விழாவுக்காகத்தான் ஆதீனம், பெங்களூருக்கு கிளம்பினார். அவருடன் வைஷ்ணவி,
உள்ளிட்ட சிலரும் சென்றனர். போகும்வழியில் திருப்பரங்குன்றம் தாண்டி, ரிங்
ரோட்டிலேயே அவரது எண்டோவர் கார் ரிப்பேர் ஆகி நின்றது. என்னை ஆதீனம்
தொடர்புகொண்டு உன்காரை எடுத்துக்கொண்டு வா என்றார். நான் அங்கு
வருவதற்குள்ளேயேஆதீனம் லைனுக்கு
வந்த நித்தி, நிலைமையைத் தெரிந்துகொண்டு, ஒரு கரை ஏற்பாடு செய்து ஆதீனத்தை
பெங்களூருக்கு அழைத்துக்கொண்டார். நானும் என் காரில் பெங்களூர் சென்றேன்.
ஷாப்பிங் மால் திறப்புவிழா முடிந்ததும் நான், மதுரை திரும்பிவிட்டேன்.
ஆதீனம் நித்தியின் அழைப்பின் பேரில் பிடதி ஆசிரமத்திற்குப் போனார். அதற்கு
மறுநாள் ஒரு விழாவை நித்தி அங்கே நடத்தியிருக்கிறார். அப்போது புனித நீர்
என்று ஒரு திரவத்தை எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்கள். அதைக்
குடித்ததும் ஆதீனம் எங்கோ மிதப்பதுபோல் உணர்ந்திருக் கிறார். பிறகு
ஆதீனத்தின் தலையில் ஒரு கிரீடத்தை அணிவித்த நித்தி, இன்னொரு கிரீடத்தை அவர்
கையால் தனக்கு அணிவிக்கச் சொல்லியிருக்கிறார். அப்போது மைக்கில் நித்தி
இளைய ஆதீனமாக முடிசூட்டப்படுகிறார் என அறிவித்திருக்கிறார்கள். அதை
கவனிக்கும் நிலையில் ஆதீனமும் அவருடன் சென்ற வர்களும் இல்லை என்பதுதான்
ஆச்சரியம். பின்பு, ஒரு ஃபாரத்தில் கையெழுத்துப் போடுங்கள், என்று ஒரு
ஆவணத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இந்த விழாவில் இந்தியாவை
சேர்ந்த 100 பேரும் ஃபாரினர்கள் 100 பேரும், நித்தி சீடர்கள் 100 பேரும்
கலந்துகொண்டனராம். அங்கே ஆண், பெண் சீடர்களின் நடவடிக்கைகள்....
|