இடையூறு இல்லாமல் இறைவனை வழிபட ஜாமர் கருவி தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 10 இணை-ஆணையர் அந்தஸ்திலான கோவில்களும், சென்னை பார்த்தசாரதி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட 10 துணை-ஆணையர் அந்தஸ்திலான கோவில்கள், 27 உதவி-ஆணையர் அந்தஸ்திலான கோவில் உட்பட 39 ஆயிரம் கோவில்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 10 மலைக்கோவில் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் எடுத்து வரு வதால் சுவாமி வழிபாடு செய்யும் போது செல்போன் மணியோசை ஒலிக்கிறது. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. திருச்சி ஐயப்பன் கோவில் போன்ற தனியார் கோவில் களில் செல்போனுக்கு தடைவிதித்துள்ளனர். இதேபோன்று அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் மூலஸ்தானங்களில் செல்போன் பயன் பாட்டை தடுக்கும் ஜாமர் கருவி பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.