அண்மைச் செய்திகள்
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு ||
இந்தியா
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்!
......................................
சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்!
......................................
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத்
......................................
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித்
......................................
பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு
......................................
ஐ.மு.கூ. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மன்மோகன் சிங் பேச்சு
......................................
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு!
......................................
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
......................................
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
......................................
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
......................................
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
......................................
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
......................................
ஓய்வு பெற்றார் விநோத்ராய்
......................................
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான்
......................................
சவுதி : 5 பேருக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
நடிகர் விண்டூ தாரா சிங்கின் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை
......................................
பள்ளி பாடபுத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய குறிப்புகள்
......................................
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (8:44 IST)

பேஸ்புக் இணைய தளத்தில் காதலியை
விபசார அழகியாக விளம்பரம் செய்த என்ஜினீயர்

பெங்களூரில் பேஸ்புக் இணைய தளத்தில் காதலியை விபசார அழகியாக விளம்பரப்படுத்திய தனியார் நிறுவன என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். ஒரு தலை காதலால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெங்களூர் டொம்லூர் நாராயணபுரா பகுதியில் வசித்து வருபவர் கேசவமூர்த்தி. இவரது சொந்த ஊர் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா புட்டேனஹள்ளி ஆகும். கோரமங்களாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக கேசவமூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், புட்டேனஹள்ளியை சேர்ந்த இளம்பெண் ராதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) மீது கேசவமூர்த்திக்கு காதல் மலர்ந்தது.

இதுபற்றி ராதாவிடம், கேசவமூர்த்தி தெரிவித்தார். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
 
அதன்பிறகு ராதாவின் பெற்றோரிடம் சென்று தனக்கு ராதாவை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். இதற்கு அவர்களது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் ராதா மீதும் அவர்களது பெற்றோர் மீதும் கேசகமூர்த்தி மிகுந்த கோபத்தில் இருந்தார்.


இதற்கிடையே, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டிப்ளமோ முடித்து விட்டு பெங்களூர் வந்த ராதா இங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்

. கே.ஆர்.புரம் பகுதியில் முதலில் தங்கி இருந்த ராதா, தற்போது ஜே.பி.நகரில் வசித்து வருகிறார். இதை தெரிந்து கொண்ட கேசவமூர்த்தி, ராதாவை பழிவாங்கும் எண்ணத்துடன், அவரது செல்போனிற்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்.க்களை அனுப்பு உள்ளார்.


இதுபற்றி ஜே.பி.நகர் போலீசில் ஏற்கனவே கேசவமூர்த்தி மீது ராதா புகார் செய்திருந்தார். அப்போது கேசவமூர்த்தியை அழைத்த போலீசார், ராதாவிற்கு இதுபோன்ற தொந்தரவுகளை கொடுக்க கூடாது, மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.


இந்தநிலையில், கே.ஆர்.புரம் போலீசில் கேசவமூர்த்தி மீது ராதா மற்றொரு புகார் கொடுத்து உள்ளார். அதில், எனது பெயரில் பேஸ்புக் இணைய தளத்தில் கேசவமூர்த்தி புதிதாக கணக்கு தொடங்கி, என்னுடைய புகைப்படத்தையும், அவரது புகைப்படத்தையும் இணைத்து வைத்துள்ளார். மேலும் பெங்களூர் நகரில் நான் (ராதா) பெரிய விபசாரி என்றும், ஒருநாள் என்னுடன் இருக்க ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும் என்றும் எழுதி வைத்துள்ளார்.


நான் 23 முறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும் பேஸ்புக் இணைய தளத்தில் என்னை பற்றி தவறாக கேசவமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதுதவிர என்னுடைய செல்போனுக்கும், பெற்றோர், உறவினர் செல்போனுக்கும் ஆபாச மற்றும் தகாத வார்த்தைகளில் திட்டி எஸ்.எம்.எஸ் அனுப்பி வைத்து உள்ளார். எனவே கேசவமூர்த்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த புகாரில் ராதா கூறி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ராதா கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர். மேலும் இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி தொந்தரவு செய்தது,
 
இணையத்தில் அவரது பெயரை கலங்கப்படுத்தியதாக கூறி என்ஜினீயர் கேசவமூர்த்தியை நேற்று காலையில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rock Country : India Date :7/15/2012 2:44:17 PM
பேஸ்புக் இணைய தளத்தில் காதலியை விபசார அழகியாக விளம்பரம் செய்த என்ஜினீயர் பெங்களூரில் பேஸ்புக் இணைய தளத்தில் காதலியை விபசார அழகியாக விளம்பரப்படுத்திய தனியார் நிறுவன என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். ஒரு தலை காதலால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.