மனைவியை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை
பெங்களூர் பெண் ஒருவரை அவரது கணவரே சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை செய்த சம்பவம் நடந்து உள்ளது.
உடுப்பியை சேர்ந்த ஆகாஷ். பல் டாக்டர். இவருடைய மனைவி சப்னா (வயது 26). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சப்னா பெங்களூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்து வருகிறார்.
இந்த நிலையில், சப்னா தனது கணவர் ஆகாஷ் மீது ஞானபாரதி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.
அதில் அவர், `எனது கணவர் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தார். மேலும் செக்ஸ் ரீதியாகவும் சித்ரவதை செய்தார்.
அத்துடன் எனது சிறுநீரை என்னையே குடிக்க வைத்து கொடுமை செய்தார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஞானபாரதி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆகாஷை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது.