அன்சாரிக்கு சரத்பவார் ஆதரவு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஹமீது அன்சாரி இன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வேளாண் மந்திரியுமான சரத்பவார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் இன்று மும்பையில் செய்தி யாளர்களிடம், ‘’எங்களது கூட்டணி கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் நான் பங்கேற் கவில்லை.
ஆனால் எங்களது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஹமீது அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அவரது வேட்பாளர் தேர்வை நாங்கள் வரவேற்கிறோம்.
அனைத்து எம்.பி.க்களும் அவருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். துணை ஜனாதிபதியாகவும், டெல்லி மேல்–சபை தலைவராகவும் பதவி வகிக்க அவர் திறமை வாய்ந்தவர் என்பது, ஏற்கனவே ஒரு தடவை பதவி வகித்த காலத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது’’என்று கூறியுள்ளார்.